புனித ஹஜ் பயணம் 2024 : வலைத்தளமூடாக பதிவு செய்யலாம்

 

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள எண்ணியுள்ளவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்திற்குச் சென்று அதில் வினவப்பட்டுள்ள விண்ணப்பத்திற்கு அமைவாக தங்கள் பதிவுகளை மேற் கொள்ள முடியும்.

2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் முகவர்களைத் தேர்வு செய்கின்ற நேர்முகத் தேர்வு எதிர்வரும் நவம்பர் 02,03,04 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்படும் முகவர்களின் விபரங்களை திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டதன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்களுடன் மாத்திரம் 2024ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ் குழு ஆகியன கேட்டுக் கொள்கின்றது.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரியூடாக மாத்திரம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தள முகவரி

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்