புகையிரதத்தில் இருந்து புகைப்படம் எடுக்க முயற்சித்த பெண் தவறி விழுந்து காயம்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் எல்ல ஒடிஸி புகையிரதத்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

புகையிரதத்தில் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது குறித்த பெண் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பெண் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.