
பாங்கொக்கில் நில அதிர்வு: மூவர் பலி
நில அதிர்வைத் தொடர்ந்து பாங்கொக்கில் மூவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை பாங்கொக்கில் உள்ள மூன்று வணிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த வணிக வளாகத்திலிருந்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுஅறிவித்தல் வரை குறித்த வணிக வளாகங்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.