ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சட்ஜி.பி.டி தற்போது கிப்லி புகைப்படங்களைப் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
கிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும்.
இந்த ஸ்டூடியோ பல அனிமேஷன் படங்களையும் தயாரித்திருக்கிறது.
இதனை மையப்படுத்தி தற்போது கிப்லி புகைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்ஜி.பி.டியில் புகைப்படங்களைப் பதிவேற்றி கிப்லி புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
பயனாளர்கள் ஒரே நேரத்தில் இந்த அனிமேஷன்களை பயன்படுத்துவதால் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்,வெளியிட்டுள்ள குறித்த பதிவில் கிப்லி புகைப்படங்களைப் பெற்றுக்கொள்வதிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ள முடியுமா? இது மிகவும் கடினமாக உள்ளது,எங்களின் குழுவுக்கு நித்திரை தேவைப்படுகிறது. எனப் பதிவிட்டிருக்கிறார்.
தற்போது சால் அல்ட்மெனின் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.