கொழும்பு வத்தளை பகுதியில் பாடசாலையொன்றில் உள்ள கிரிக்கட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்து ரி-56 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
இதன்போது கனேமுல்ல சஞ்சீவவிற்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ரி-56 துப்பாக்கி ஒன்றுஇ 4 மகசீன்கள்இ 9எம்.எம் ரவைகள் அடங்கிய 18 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கி தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.