இலங்கையில் அண்மையில் பன்றிகளுக்குப் பரவிய நோயானது ஆப்ரிக்காவில் பரவிய நோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் கம்பஹா மாவட்டத்திலும் முதன்முறையாகக் குறித்த நோயானது அடையாளம் காணப்பட்டது.
