-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா பாலத்தருகில் மாபெரும் பாரம்பரிய படகோட்டப் போட்டி இன்றுசனிக்கிழமை மாலை இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த குறித்த போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்.
கிண்ணியா துறையடி கடற் பகுதியில் இருந்து கிண்ணியா பூங்க வரை கடல் வழியாக இப் படகோட்டப் போட்டி இடம் பெற்றது.
தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டின் ஒரு பகுதியாக படகோட்டப் போட்டி இடம் பெற்றமை வரவேற்கத்தக்க ஒன்றாக காணப்படுகிறது.
இப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்காக முதலாம் பரிசாக ரூபா 100000, இரண்டாம் பரிசாக ரூபா 50000, மூன்றாம் பரிசாக ரூபா 25000 என வழங்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவன் அதுகோரள, இந்திய உயர்ஸ்தானிகர் ஆலய துணைத் தூதுவர் வெங்கடேஷ் உட்பட மாகாண திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



