
நிவாரணப் பொதிகள் கையளிப்பு
சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.
கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் ஜம்இய்யதுல் உலமா, பொது நிறுவனங்கள் சம்மேளனம், வர்த்தக சங்கங்கள், ஊர் மக்கள் ஆகியோரின் பங்களிப்பில் கல்முனை அனர்த்த நிவாரண முகாவைத்துவ பணிமனையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு 850 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

