தேங்காய் சார்ந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளளவைக் கொண்டுள்ள தேங்காய் சார்ந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கும், தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான கொப்பரை அல்லாத உலர் தேங்காய்  துண்டுகளை இறக்குமதி செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேங்காய் சார்ந்த தொழிற்துறை மற்றும் நுகர்வோரைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளிரூட்டப்பட்ட தேங்காய் பூ, கொப்பரை அல்லாத உலர் தேங்காய் துண்டுகள், தேங்காய்ப் பால், தேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கு ஏற்புடைய வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் இணைந்து இந்த வழிகாட்டுதலைத் தயாரித்துள்ளன.