தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையின் இலங்கைக்கான புதிய பேராயராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி வன வேலுப்பிள்ளை பத்மதயாளனுக்கு பாரதிபுர திருச்சபை மக்கள் வரவேற்பு விழா மேற்கொண்டிருந்தனர். இதன் போது பாரதிபுரம் திருச்சபையின் செயலாளர் எஸ். சி. ஜெயம் வரவேற்புரையாற்றினார் தொடர்ந்து திருச்சபை வாலிபர்களுக்கு நற்கருணை திடப்படுத்தல் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வன கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளனால் வழங்கி திருநிலை படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் பேராயர் இறைவனின் பற்றுறுதி தொடர்பாக விளக்க உறையாற்றினார். தொடர்ந்து உரையாற்றும் போது பாரதிபுரம் திருச்சபை தொடர்பாக1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாரதிபுரம் மக்களுக்கு 105 வீட்டுத்திட்டம் மற்றும் பொதுக்கிணறுகள் மலசல கூடங்கள் என பல்வேறு பட்ட சமூக செயற்பாடுகள் அதைத்தொடர்ந்து 1986 ஆம் ஆண்டில் இருந்து எவ்வாறு திருச்சபை வளம் பெற்றது பின்னரும் சமூக செயற்பாடுகள் குறித்தும் வணக்கத்திற்குரிய பேராயர் அவர்கள் திருச்சபை மக்களுக்கு மீள் நினைவூட்டலை மேற்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் வன்னி பிராந்திய குழு ஜோசப் அடிகளார் முருகண்டி திருச்சபையின் போதகர் கர்த்தரின் அடிகளார் பாரதிபுர திருச்சபையின் போதகர் றொக்சன் அடிகளார் மற்றும் திருச்சபை மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்