துறைநீலாவணையில் ஆங்கில பாலர் பாடசாலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம்-துறைநீலாவணையில், ஆங்கில பாலர் பாடசாலை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தவிசாளரின் திட்ட முன் மொழிவுக்கமைய, சபையின் அனுமதியுடன், அதி நவீன வசதிகளுடன் ஆங்கில பாலர் பாடசாலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், பாலர் பாடசாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு, பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன், போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் போன்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் உப தவிசாளர், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.