இந்தியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு கைத்துப்பாக்கி, 11 தோட்டாக்கள், 2 தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் சூரியவெவ மற்றும் பதுவத்த பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுவத்தயில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கி, மகசின் மற்றும் தோட்டாக்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.