அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த தனியார் பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பேருந்தில் சாரதியும் மற்றொரு நபரும் இருந்ததால், தீ விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென கூறப்பட்டுள்ளது.

தெற்கு விரைவுச்சாலை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க