தரம் ஒன்றிலிருந்து ஆங்கில பாடம் : கல்வி அமைச்சரின் ஆலோசனை

அடுத்த வருடம் ஆரம்பமாகவுள்ள,  தரம் 01 இல் இருந்து ஆங்கில பாடங்களை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஒன்லைன் அடிப்படையிலான கல்வி நடவடிக்கைகளுக்கு ஆங்கில மொழியின் முக்கியத்துவம் கல்வி அமைச்சினால் அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தரம் 06 முதல் கணிதம் மற்றும் விஞ்ஞானம் சிங்களம் மற்றும் தமிழில் கற்பிக்கப்படுவதாக தெரிவித்த அவர், பாடங்களை ஆங்கில மொழியிலும் கற்பிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இணைய தளங்களில் பாடங்களின் தொழில்நுட்ப உள்ளடக்கம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால் பாடங்களை நடத்துவது கடினமாகிவிட்டது என்று அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் ஆங்கிலம் பேசும் ஆசிரியர்கள் இல்லாததால், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.