டெக்சாஸில் விபத்தை ஏற்படுத்தியவரை அடையாளம் கண்ட பொலிஸார்

அமெரிக்காவின் டெக்சாஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான அமெரிக்க பிரஜை ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய வாகனத்தில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய கொடி ஒன்று காணப்பட்டதாகவும், பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த வாகனத்தை செலுத்திய நபர் அதற்கு முழுமையான பொறுப்பாளி இல்லை என விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலம் விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.