
சேவல் கூவியதால் தூக்கத்தை இழந்த நபர் முறைப்பாடு
இந்தியாவின் கேரளா மாநிலத்தில், பல்லிகல் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கும் அவரது அயல் வீட்டாருக்கும் இடையே சேவலால் தகராறு ஏற்பட்டுள்ளது.
தினமும் அதிகாலை மூன்று மணிக்கு சேவல் கூவுவதால் குறித்த முதியவர் தூங்க முடியாமல் சிரமத்திற்கு முகம் கொடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த முதியோரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அயல்வீட்டாரின் சேவலால் தனக்கு தூக்கம் கெடுவதாக கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சேவலை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வீட்டாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.