யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயணிகளின் பேருந்தின் மீது நேற்று திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
வேலணை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி பயணித்த பேருந்து, மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போது இடம் தரவில்லை என, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் பேருந்தின் சாரதியுடன் முரண்பட்ட நிலையில், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் பேருந்தில் பயணித்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.