
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியமைக்கு காரணம் அரசியல்: எலான் மஸ்க்
அரசியல் காரணங்களாலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது வரை சிக்கியுள்ளதாக ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது.
இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதாக ஈலோன் மஸ்க் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வருவதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி உள்ளதாகவும் இருவரையும் விண்வெளியிலிருந்து வெற்றிகரமாக அழைத்து வருவோம் எனவும் ஈலோன் மஸ்க் குறிப்பிட்டார்.