சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகும் திருகோணமலை மக்கள்

-மூதூர் நிருபர்-

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை மக்கள் நாளை சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கடைகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதோடு கடைகளில் தேசியக் கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்