ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லகினாகல பகுதியில் காணியொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குறித்த காணிக்குள் நுழைய முயன்றபோது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கலிரமன்கட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக மின்கம்பியைப் பொருத்தியதாகக் கூறப்படும் லகினாகல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










