சுகாதார சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-
சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக மேற்கொண்டு இருந்தனர்.

சம்பளம் 2016 இன் பின் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, கிழமையில் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட பல அம்ச கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு 2023.11.01 ஆம் திகதி மு.ப 7.00 தொடக்கம் பி.ப 12.00 வரை சுகாதார சேவை தொழிற் சங்க கூட்டணியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சுகாதாரச் சேவை தொழிற்சங்கம் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்