போக்குவரத்து அமைச்சுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் சிதைவடைந்த நிலையிலிருந்த ஜீப் வாகனமொன்றை நுவரெலியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்கு அருகில் குறித்த வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தாம் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தமது இணைப்பதிகாரி ஒருவருக்குக் குறித்த ஜீப் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனம் பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது முன் பக்க இலக்கத்தகடு இன்றியும் பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஜீப் வாகனமும் மற்றுமொரு ஜீப் வாகனமும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக அமைச்சரினால் வழங்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் வண்டியை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது இவ் ஜீப் வண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.