சாணக்கியனுக்கு ரணிலிடம் இருந்து 60 கோடி ? – ஜனா தெரிவிப்பு! (வீடியோ இணைப்பு )

சாணக்கியன் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து 60 கோடி ரூபாய் பணம் பெற்றார் என்றால் அவர் அதை தமிழரசுக்கட்சியின் அனுமதியுடனா பெற்றார்? அவர் தனிப்பட்ட முறையில் ரணிலுக்கு மறைமுகமாக வேலை செய்ய அதை பெற்றிருக்கலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

சாணக்கியன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 11 கோடி ரூபாய் பெற்றார் என சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.