கண்டி – நுவரெலியா வீதியில் கொத்மலை, ரம்பொட கரடி எல்ல பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை மற்றும் நுவரெலியாவில் உள்ள ஆதார வைத்தியசாலைகளிலும், பேராதனை மற்றும் கண்டியில் உள்ள போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.