அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தனது மனைவியைக் கொலை செய்த நபர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்