காலி முகத்துவார கடற்கரையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
