கச்சா எண்ணையின் விலை பாரியளவில் அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 124 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

உலக சந்தையில் மார்ச் மாதத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச கச்சா எண்ணெய் விலை இதுவாகும்.