முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் ஏற்பட்டு சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான வழக்கொன்றிற்காக கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு சென்றிருந்த நிலையில் வழக்கு முடிவடைந்தும் அவர் நேற்று சனிக்கிழமை காலை சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில் அங்கு சென்ற வேளை அவருக்கு நேற்று திடீர் சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.