உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறள் காணப்படுவதுடன் ஒரு மனிதனுடைய வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் இரண்டு வரிகளில் எமக்கு எடுத்து சொல்கிற அரிய நூல் என்ற சிறப்பையுடையது.
இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந் நூலில் இன்று நாம் அறிந்து கொள்ளப்போவது உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற அடியினை பற்றியே
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து “
💢குறள் எண் – 596
💢பால் – பொருட்பால்
💢இயல் – அரசியல்
உள்ளுவது – நினைப்பது
எல்லாம் – யாவும்
உயர்வுள்ளல் – உயர்வாகவே நினைக்க
தள்ளினும் – கைகூடாவிடினும்
தள்ளாமை – கைவிட்டுவிடக் கூடாது
நீர்த்து – நீர்த்துப் போக விடாமல், செயல்படுத்தாமல்
எப்பொழுதும் (அரசன், தலைவன்) எண்ணுவது எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் ஆக மட்டுமே இருக்க வேண்டும். அத்தகைய எண்ணங்கள் சில நேரம் கை கூடி நல்ல பலன்களை அளிக்க கூடும். சில நேரம் செயலற்று, பயனில்லாமல் போக கூடும். அது கை கூடாத தருணங்களில் கூட, நாம் ஊக்கத்தோடு, உயர்வாக எண்ணுவதை விட்டு விடாமல் இருக்க வேண்டும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
எண்ணங்கள் உயர்வாக உள்ள பொழுது அது நம் செயலில் பிரதிபலிக்கும். அது நம்மிடமும், நம்மை சுற்றி உள்ளோரிடமும் ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும். அதுவே நம் வெற்றிக்கும் அடிக்கோளாக அமையும். சில சூழ்நிலைகளில் வெற்றி கை கூடாமல் போகும் பொழுது, நாம் தளர்வடையாமல் எதிர்மறை சிந்தனைகள் நம்மை அட்கொள்ளாமல், உயர்ந்த எண்ணங்கள் நீர்த்துப் போகாமல் காக்க வேண்டும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்