இலங்கையை சேர்ந்த இருவர் இத்தாலி நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் இத்தாலி சென்றிருந்த சமயம் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது, தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
