இன்றிரவுக்குள் மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பும்
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் பராமரிப்பு பணிகள் இன்றிரவுக்குள் (20) நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்பட்ட இரவு தபால் ரயில் இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹியா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதால், மண் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் உருண்டு விழுந்தன .
இதேநேரம் இன்று (20) கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு இயக்கப்படும் ரயில்கள் நானுஓயாவுக்கும் , பதுளையில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயில்கள் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் செல்லும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
