அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள்

-யாழ் நிருபர்-

“விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்” எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று திங்கட்கிழமை யாழ் தந்தை செல்வா அறக்கட்டளை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

பார்வையற்றவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக அவர்களால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள், இசைக்கருவிகள் இசைத்தல் கிரிக்கெட் விளையாடுதல், நவீன தொலைபேசிகளை இயக்குதல், போன்ற பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் இன்றும் நாளையும் இந்த கண்காட்சி தொடரவுள்ளது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண மகளிர் விவகாரம் சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் பொன்னம்பலம் வாகீசனும் கலந்து கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்