அநுராதபுரம், மெதகம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை ரயில் மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகம, பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.