அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு : திருகோணமலை – தோப்பூர் அஞ்சல் அலுவலகம் பூட்டு!

-மூதூர் நிருபர்-

அஞ்சல் ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக திருகோணமலை – தோப்பூர் அஞ்சல் அலுவலகம் இன்று திங்கட்கிழமை மூடப்பட்டு காணப்பட்டது.

இதனால் தபால் நிலையத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் சேவைகள் பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.

ஊழியர்கள் கடமையை ஆரம்பிக்கும் நேரம் மற்றும் வௌியேறும் நேரம் என்பவற்றை கைவிரல் அடையாள இயந்திரங்களில் பதிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.