ஹயஸ் வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம், பலாலி வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில், ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் (வயது 59) என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.