தென்னிந்திய பிரபல நடிகையான தமன்னா, இன்று வெள்ளிக்கிழமை பகல் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள நிலையில் அவருடன் நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் ஆகியோர் இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.
நடைகை ரம்பா கணவரும் யாழ்ப்பாணத்தை சேர்த புலம்பெயர் தமிழருமான இந்திரகுமார் பத்மநாதனின் நோர்த் யுனி நடத்தும் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
உற்சாக வரவேற்பு தென்னிந்திய கலைஞர்களுக்கு யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்காக பல்வேறு தென்னிந்திய பிரபலங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.