யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தர்.

72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேற்று இடம்பெறவிருந்த கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்கிரம தெரிவித்திருந்தார்.

அதற்கமைய,  இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.