முல்லைத்தீவு காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மண்ணகண்டல் ஒதுக்க காட்டினுள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை அத்து மீறி உள் நுழைந்து மரை ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கும்போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரி தலைமையின் கீழ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டதோடு மரை இறைச்சியும், கட்டு துவக்கும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக நடவடிக்கைகளுக்காக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் சந்தேகநபர் ஒப்படைக்கபட்டார்.
இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.