முகப்பரு ஏற்பட காரணம் என்ன? எப்படி அகற்றுவது
⭕முகப்பரு என்பது செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து க்ரீஸ் சுரப்புகள் மயிர்க்கால்களின் திறப்புகளை அடைக்கும்போது ஏற்படும் ஒரு தோல் நிலை. இது பொதுவாக பரு வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. முகப்பருக்கான நோயறிதல் மேலே கொடுக்கப்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் சுய மதிப்பீடு செய்யப்படலாம்.
முகப்பரு ஏற்பட்டால் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
🧊 முகப்பரு ஏற்பட்டால் தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீரை குடிக்க வேண்டும். எஅதிக தண்ணீர் பருகினால் முகப்பரு குறையும்.
🍫 இதேபோல், உணவில் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவைக் குறைக்க வேண்டும். சாக்லேட், சீஸ், பனீர் மற்றும் பிற பால் பொருட்களின் நுகர்வை குறைக்க வேண்டும். அதிக காய்கறிகள் மற்றும் புளிப்பு பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிகிச்சைகள்
🌘 முகப்பருக்களுக்கு கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆரம்ப நிலையிலேயே முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டால் முகத்தில் வடுக்களோ குழிகளோ ஏற்படுவதை தவிர்க்கலாம்.
💢சிகிச்சையின் முதல் பகுதி தடுப்பு ஆகும். அதாவது, உணவில் கவனம், நீரேற்றத்தில் கவனிப்பு. சிகிச்சையின் இரண்டாவது பகுதி மருந்துகளை உள்ளடக்கியது. முகப்பருவுக்கு கிண்டாமைசின், பிங்கல்பெராக்சைடு போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
💢அடுத்த பகுதி ரசாயனம் பூசுதல். முகத்தில் ரசாயனம் பூசுவதன் மூலம் குழி ஏற்படுவது தவிர்க்கப்படும். இதற்கு அடுத்த மூன்றாவது பகுதி என்பது லேசர் சிகிச்சை ஆகும். குழி இருந்தால் லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
💢பிரிட்டிஷ் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, முகப்பரு சிகிச்சை 3 மாதங்கள் வரை நீடிக்கும், எனவே ஒரே இரவில் அல்லது உடனடி முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
முகப்பருவை கட்டுப்படுத்துவதற்கான வீட்டு மருத்துவம்
🧜♀️பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு நாளைக்கு இரண்டு தடவைக்கு மேல் நீர்கொண்டு கழுவ வேண்டாம் என்றும் பிரிட்டர் சுகாதார துறை கூறுகிறது. தொடர்ந்து அந்த இடத்தை கழுவுவதால் தோல் எரிச்சல் ஏற்பட்டு அறிகுறிகள் மேலும் மோசமடையக்கூடும்.
🧜♀️பாதிக்கப்பட்ட இடத்தை சோப் மற்றும் மிதமான சூட்டில் உள்ள நீரை கொண்டு கழுவலாம். அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரை கொண்டு கழுவுவது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
🧜♀️கரும்புள்ளிகளை “சுத்தம்” செய்யவோ அல்லது புள்ளிகளை அழுத்தவோ முயற்சிக்காதீர்கள். இது அவற்றை மேலும் மோசமாக்கி நிரந்தர வடுவை ஏற்படுத்தக் கூடும்.
🧜♀️அழகு சாதனப் பொருட்களை அதிகப்படியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
🧜♀️எண்ணெய் சார்ந்த மேக்கப் பொருட்கள்இ சூரிய கதிர்வீச்சு தடுப்பு பொருட்களுக்கு பதிலாக தண்ணீர் சார்ந்த பொருட்களை பயன்படுத்தலாம்.
🧜♀️தூங்குவதற்கு முன்பாக மேக்கப்பை முழுவதும் அகற்றிவிட வேண்டும்.
🧜♀️தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது என்பது உங்கள் முகப்பருவை குணப்படுத்தாது. எனினும், இது உங்களின் மனநிலையை புத்துணர்ச்சி அடைய செய்து உங்களை பற்றி நீங்கள் உயர்வாக எண்ண வழிவகுக்கும்.
🧜♀️உங்கள் தலைமுடியை தவறாமல் கழுவவும், உங்கள் தலைமுடி உங்கள் முகத்தில் விழுவதைத் தவிர்க்கவும்.
🧜♀️முகப்பருவை குணப்படுத்த முடியாவிட்டாலும், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம்.
🧜♀️உங்களுக்கு லேசான முகப்பரு ஏற்பட்டால், ஆலோசனைக்காக ஒரு மருந்தாளரிடம் பேசுவது நல்லது.
🧜♀️புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்க பல கிரீம்கள், லோஷன்கள் மற்றும் ஜெல்களை மருந்தகங்களில் வாங்கலாம்.
🧜♀️குறைந்த பென்சாயில் பெராக்சைட் செறிவு கொண்ட தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படலாம், ஆனால் இது ஆடைகளை ப்ளீச் செய்யும் என்பதால் கவனமாக இருக்கவும்.
🧜♀️உங்கள் முகப்பரு கடுமையாக இருந்தால் அல்லது உங்கள் மார்பு மற்றும் முதுகில் தோன்றினால், அதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது மேலும் வலிமையான கிரீம்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். இவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே கிடைக்கும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍋மஞ்சள், முகப்பரு பாதிப்பு மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது.
🍋முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கவும், முகப்பருவை ஆற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.
🍋மஞ்சளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யமான அழகு குறிப்புகள் இங்கே உள்ளன. தொடர்ந்து படியுங்கள்.
மஞ்சள் தூள்
🍓மஞ்சளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையை எளிதாகச் சரி செய்யலாம் சிறிது ஃபவுண்டேஷன் எடுத்து அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.
🍓அவற்றை நன்கு கலந்து, ஷேட்-ஐ சரிபார்க்க கையின் பின்புறத்தில் தடவவும்.
🍓இப்போது அதை முகத்தில் தடவவும்; இது உங்களுக்கு இயற்கையான பிரகாசத்தை தரும்.
🍓உங்கள் பிபி க்ரீமில் கூட இந்த ஹேக்கை பயன்படுத்தலாம்.
🍓மஞ்சள், முகப்பரு பாதிப்பு மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் சிறப்பாக செயல்படுகிறது.
கற்றாழை ஜெல்
🍒முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கவும், முகப்பருவை ஆற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.
🍒அரை டீஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்து, அதனுடன் அரை டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்து கொள்ளவும். உடனடி நிவாரணம் பெற இந்த பேஸ்டை, பாதித்த இடத்தில் தடவவும்.
🍒இதனை தொடர்ந்து செய்து வந்தால் மிருதுவான சருமத்தை பெறலாம்.
🍒மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உதடு வெடிப்புகளை நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.
🍒மஞ்சளுடன் ஒரு சிட்டிகை பெட்ரோலியம் ஜெல்லி கலந்து, உங்கள் உதடுகளின் வறண்ட சருமத்தை எக்ஃபாலியேட் செய்யவும்.
🍒ஒரு துணியால் அதை துடைத்து, பின்னர் ஒரு மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்