மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் காயமடைந்த நிலையில்இ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய செபமாலை டென்சன், 19 வயதுடைய செ.மதுசாளினி, 16 வயதுடைய செ.அருள்வேந்தன் ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த பகுதியில் நேற்றுமாலை இடியுடன் கூடிய மழை பெய்தபோது வீட்டின் மின்சார இணைப்பு ஊடாக மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த சகோதரியும், இரண்டு ஆண் சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் மின்சார இணைப்புக்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதுடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவரும் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்