மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்
மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புழுதிவயல் பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை 11.30 மணி மின்சாரம் தாக்கி இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி – புழுதிவயல், ரெட்பானா பகுதியைச் சேர்ந்த குப்பை மரிக்கார் பாத்திமா சாபிகீன் (வயது – 38) எனும் ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் மின்சார தேவைக்காக மின் வயரை எடுத்து கையாளுகையிலேயே இவ்வாறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளான குறித்த இளம் பெண்ணை, அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்குட்படுத்திய பின்னர் மின்சாரம் தாக்கியே இவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டு தற்போது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்