மின்சாரம் தாக்கியதில் தச்சு தொழிலாளி மரணம்

காலி – எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த விமல் சிசிர குமார (வயது – 43) என்ற தச்சுத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் குழு ஒன்றினால் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றிற்கு விநியோகிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளமை பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்