மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆனைகட்டியவெளி சமுளையடிவட்டை வயல் பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சங்கர் புரதத்தை சேர்ந்த 45 வயதுடையவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அதிகாலை வேளையில் தனது வயலுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.