மட்டக்களப்பில் கடைகள் திடீர் பரிசோதனை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி  பகுதியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது 6 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சி குடி சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடை தொகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இந்த திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டது.

இதன் போது பாவனைக்கு ஒவ்வாத பொருட்களை விற்பனை செய்த கடைகள் இனம் காணப்பட்டு அவர்களுள் 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஏனையவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடைகளில் இருந்து கைப்பற்றபட்ட பாவனைக்கு ஒவ்வாத பொருட்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.