வீட்டின் முன் நடமாடி திரிந்த காட்டு யானையால் அச்சம்

-கல்முனை நிருபர்-

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பாண்டிருப்பில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக்குடியேறி வசித்து வரும் மேட்டுவட்டை வீட்டு திட்டத்தில் திடீரென காட்டுயானை ஒன்று நடமாடிக் திரிந்தால் அங்குள்ள மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.

சமீபகாலமாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் வருகையும், அட்டகாசமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் இரவு வேளையில் கிராமங்களுக்குள் உள் நுழையும் யானைகள் பயனுள்ள மரங்களையும், மக்கள் குடியிருப்புக்களையும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று பாண்டிருப்பு பெரியகுளம், மேட்டுவட்டை வீட்டுத்திட்டத்தில் தனி யானை ஒன்று வீதியில் நடமாடித் திரிந்தது.

இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்தனர்.

இவ்வாறு கிராமங்களுக்குள் உள் நுழையும் காட்டுயானைகளை விரட்டுவதற்கு வனவிலங்கு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.