பேக்கரி உற்பத்திகள் விலை குறைக்கப்பட வேண்டும்

மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

எரிவாயு விலைகள் குறைக்கப்படும் போது பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் தமது வெதுப்பகங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குவதாக கூறி பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என தெரிவித்தனர். இருப்பினும் தற்போது மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உணவகங்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்