பலத்த காற்றில் இரண்டாக உடைந்த படகு

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்-

இயந்திரம் இன்றி இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.

குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் படகு இரண்டாக உடைந்து இயந்திரமும் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளது.