பந்தை கையால் பிடித்து மோசமான சாதனையை பதிவு செய்த வீரர்

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து .

இதையடுத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில்  பங்களாதேஷ் 150 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வென்றது

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தாக்காவில் தொடங்கியது.

இப்போட்டியில் இன்னிங்ஸின் 41ஆவது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார்.

அப்போது 4ஆவது பந்தை எதிர்கொண்ட முஷ்ஃபிக்கூர் ரஹிம் லேசாக ஸ்ட்ரோக் வைத்தார்.

உடனடியாக பந்து ஆடுகளத்தில் பட்டு மேலே எழும்பி ஸ்டம்ப் அருகில் சென்றது. அப்போது சுதாரித்த முஷ்ஃபிக்கூர் ஸ்டம்ப்பில் பந்துபட்டு ஆட்டமிழக்கக் கூடாது என்ற காரணத்தால் சட்டென்று பந்தை கையால் பிடித்தார்.

இது சர்வதேச கிரிக்கெட் விதிமுறையின் படி தவறு ஆகும்.

உண்மையில், பந்து ஸ்டம்பை விட்டு சற்று தள்ளியே இருந்தது. பேட்டால் வேண்டுமானால் பந்தை தடுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கையால் பந்தை பேட்ஸ்மேன் தடுக்கக் கூடாது. இது ஃபீல்டிங்கை செய்யவிடாமல் தடுப்பது போன்றதாகும்.

இதையடுத்து உடனடியாக நியூசிலாந்து வீரர்கள் அவுட் கோரி நடுவரிடம் முறையிட்டனர்.

நடுவரும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் ஆட்மிழந்ததாக அறிவித்தார்.

இதன்மூலம் பந்தை கையாள்வதின் மூலம் ஆட்டமிழந்த முதல் பங்களாதேஷ்  வீரர் எனும் மோசமான சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹீம் இன்று படைத்தார்.

இந்நிலையில் இவர் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.