Last updated on April 11th, 2023 at 07:29 pm

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு-மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் திருகோணமலை, கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த கமலதாசன் விஷ்வா (16 வயது) என தெரிய வருகின்றது.

சக நண்பர்களுடன் நேற்று மாலை மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற போது தாமரைபூ பறிக்கச் சென்றுள்ளார்.

இதன் போது, தாமரைக் கொடி சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்