தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் திருத்தம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாகவும் தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்கான கட்டணம் ஒன்லைன் முறையில் சமர்பித்தால் 25 ரூபாவாகவும், பௌதீக ஆவணங்கள் மூலமாகவோ அல்லது ஆணையர் நாயகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மின்னணு முறை மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட்டால் 500 ரூபாவாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அடையாள அட்டை புகைப்படக் கலைஞராக பதிவு செய்வதற்கான கட்டணம் 15,000 ரூபாவாக இருக்க வேண்டும் எனவும் இதற்கு முன் 10,000 ரூபாயாக இந்த கட்டணம் காணப்பட்டதுடன் இந்த பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான ஆண்டுக் கட்டணமான 2,000 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்